கண்ணிமைக்கு நேரத்தில் நடந்த சம்பவம்! கடற்கரையில் வந்து விழுந்த விமானம்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
அமெரிக்காவில் கடற்கரை ஒன்றில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சி வெளியாகி பார்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் கடற்கரையில், விமானம் ஒன்று அவசர அவசரமாக தரையிறங்க முயற்சிக்கிறது. ஆனால், விமானம் அதற்குல் கடலுக்குள் விழுந்துவிடுகிறது.
அந்த சமயத்தில் கடற்கரை மற்றும் கடலில் ஏராளமானோர் இருந்தனர். இருப்பினும் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சனிக்கிஅழமை பிற்பகல் பேட்ரிக் விண்வெளி படை தளத்திற்கு (Patrick Space Force Base) அருகே நடந்த Coca கடற்கரை விமான கண்காட்சியின் போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதில் விமானி உட்பட யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. இது குறித்து Cocoa Beach Air Show அதிகாரிகள் கூறுகையில், The TBM Avenger விமான இயந்திரப் பிரச்சனை காரணமாக, விமானி கரைக்கு அருகில் கொண்டு வர முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக உடனடியாக மீட்பு படையினர் அங்கு விரைந்துவிட்டனர்.TBM Avenger விமானம், அமெரிக்காவால் 1940-ஆம் ஆண்டு முதல் குண்டுவீச்சு விமானங்களாகப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.