நடுவானில் கோளாறான சக்கரங்கள்! தரையிறங்கி சறுக்கிச் சென்று விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்த விமானம்: பிரான்சில் பரபரப்பு
பிரான்ஸில் சிறிய ரக விமானம் ஒன்று சக்கரங்கள் வேலை செய்யாததால், அவசரமாக தரையிறங்கி விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Le Bourget விமான நிலையத்திலே இச்சம்பவம் இடம்பெற்றது. திங்கட்கிழமை காலை Luxwing விமான நிறுவனத்திற்கு சொந்தமான 9H-FAM சிறிய ரக வணிக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
Venice-லிருந்து வந்த விமானத்தின் லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக Le Bourget விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
ஓடுபாதையில் சுமார் 100 மீட்டர் சறுக்கிய படி சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்துள்ளது. விமான நிலையத்தில் தயாராக இருந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இரண்டு விமானகள் உட்பட விமானத்தில் இருந்த 3 பேர் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
⚠️ Accident du #phenom100 @embraer immatriculé 9H-FAM survenu le 08/02/21 à @GroupeADP #lebourget / Sortie de piste à l’atterrissage et début d’incendie / Travail sur site des enquêteurs @BEA_Aero terminé / Enregistreur de vol (combi FDR & CVR) prélevé. pic.twitter.com/mykwKqwwoN
— BEA ✈️ ?? ?? (@BEA_Aero) February 9, 2021
விமான விபத்திற்கான காரணம் குறித்து பிரான்ஸ் சிவில் ஏவியேஷனின் விசாரணை மற்றும் பகுப்பாய்வு அலுவலகம் விசாரணை முன்னெடுத்துள்ளது.