பிரான்சிலிருந்து புறப்பட்ட விமானத்திலிருந்து குதித்த நபரால் பரபரப்பு
பிரான்சிலிருந்து ஸ்பெயின் நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து குதித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமானத்திலிருந்து குதித்த நபரால் பரபரப்பு
வெள்ளிக்கிழமை மாலை 5.20 மணியளவில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Orly விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடிலுள்ள Barajas விமான நிலையம் நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டது.
விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தநிலையில், விமானத்துக்குள் அமர்ந்திருந்த ஒரு பயணி திடீரென எழுந்துள்ளார்.
எழுந்து அவர் விமானத்தின் கதவைத் திறக்கமுயல, விமானப் பணியாளர் ஒருவர் அவரைத் தடுக்க முயன்றிருக்கிறார்.
உடனே அந்தப் பயணி அந்த விமானப் பணியாளரைத் தாக்கிவிட்டு கதவைத் திறந்து வெளியே குதித்துவிட்டார்.
அவரது நிலைமை என்ன என்று தெரியவில்லை என்றாலும், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வளவு பரபரப்பு ஏற்பட்டும், அந்த விமானம் திட்டமிட்டபடி ஸ்பெயின் சென்று சேர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |