நான்கு முறை தரையிறங்க முயற்சித்தும் முடியாததால் சுவிட்சர்லாந்துக்கே திரும்பிய விமானம்
கடந்த வாரம் சுவிட்சர்லாந்திலிருந்து ஜேர்மனி புறப்பட்ட சுவிஸ் விமானம் ஒன்று, ஜேர்மனியில் தரையிறங்க முடியாததால், மீண்டும் சுவிட்சர்லாந்துக்கே திரும்பிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
சுவிட்சர்லாந்திலிருந்து ஜேர்மனிக்கு...
கடந்த வியாழக்கிழமை, சுவிட்சர்லாந்தில் சூரிச்சிலிருந்து ஜேர்மனியிலுள்ள Düsseldorfக்கு சுவிஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று பயணித்துள்ளது.
Düsseldorf விமான நிலையத்தில் நான்கு முறை விமானத்தை தரையிறக்க முயற்சித்தும் முடியாததால், சூரிச்சுக்கே விமானத்தை திருப்பிச் செல்வதென விமானிகள் முடிவு செய்துள்ளார்கள்.
Bjoern Wylezich | Shutterstock
அதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து திரும்பிய அந்த விமானம், சூரிச் விமான நிலையத்திலேயே தரையிறங்கியுள்ளது.
காரணம் என்ன?
அதாவது, Düsseldorfக்கு அருகே கடுமையான புயல் வீசிக்கொண்டிருந்திருக்கிறது. அதனால், விமானத்தை தரையிறக்குவது விமானிகளுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.
இந்த விடயம் குறித்து விளக்கமளித்துள்ள செய்தித்தொடர்பாளர் ஒருவர், பலத்த காற்று காரணமாக விமானத்தை தரையிறக்க முடியாததால், சூரிச்சுக்கே விமானத்தை திருப்பிச் செல்வது என விமானிகள் முடிவு செய்துள்ளனர் என்றார்.
Flightradar24.com
அதுமட்டுமின்றி, Düsseldorf விமான நிலையத்துக்கு வந்த 14 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவும், மூன்று விமானங்களின் புறப்பாடு ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மோசமான வானிலை காரணமாக, விமானம் புறப்படுவது ஆபத்தானது என்பதால், 10 விமானங்கள் வியாழனன்று ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |