ஓடுபாதையிலிருந்து வழுக்கிச் சென்ற விமானம்: சுவிஸ் விமான நிலையம் ஒன்று மூடல்
சுவிஸ் விமான நிலையம் ஒன்றிலுள்ள ஓடுபாதை ஒன்றில் விமானம் ஒன்று வழுக்கிச் சென்று புல்வெளியில் இறங்கியதைத் தொடர்ந்து விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஓடுபாதையிலிருந்து வழுக்கிச் சென்ற விமானம்
நேற்று மதியம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற தனியார் ஜெட் ஒன்று, ஓடுபாதையிலிருந்து வழுக்கிச் சென்று புல்வெளியில் இறங்கியது.
மழை காரணமாக விமான ஓடுபாதை ஈரமாக இருந்ததால், அந்த விமானத்தை மீட்பது கடினமாக இருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு மூடப்பட்ட விமான நிலையம், இரவு 9.45 மணி வரை திறக்கப்படவில்லை. அதனால், 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 10 விமானங்கள் மிகவும் தாமதமாக புறப்பட நேர்ந்தது.
ஜெனீவா விமான நிலையம் நோக்கி வந்த பல விமானங்களும் வெவ்வேறு விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவஸ்தைக்குள்ளாக நேர்ந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |