24 பயணிகளை ஏற்றாமலே புறப்பட்ட விமானம்: ஒரு எச்சரிக்கை செய்தி?

France Flight
By Balamanuvelan Mar 14, 2026 11:35 AM GMT
Report

பிரான்சிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, 24 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமலே புறப்பட்டுச் சென்றுள்ளது.

ஒரு எச்சரிக்கை செய்தி?

மார்ச் மாதம் 11ஆம் திகதி, பிரான்சிலுள்ள Tours என்னுமிடத்திலிருந்து மொராக்கோ நாட்டிலுள்ள Marrakesh என்னுமிடம் நோக்கிப் புறப்பட்ட Ryanair நிறுவன விமானம் ஒன்று, 24 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமலே புறப்பட்டுச் சென்றுள்ளது. 

24 பயணிகளை ஏற்றாமலே புறப்பட்ட விமானம்: ஒரு எச்சரிக்கை செய்தி? | Plane Takeoff Without 24 Passengers Ees Hold Ups

விடயம் என்னவென்றால், Entry/Exit System (EES) திட்டம் என்னும் திட்டத்தின் கீழ், ஷெங்கன் பகுதிக்கும், ஷெங்கன் பகுதியிலிருந்தும் குறுகிய கால பயணத்துக்காக பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டியிருக்கும் என 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதலே பல நாடுகள் அறிவித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், பிரான்சிலுள்ள Tours விமான நிலையத்துக்கு திடீரென அதிகாரிகள் சோதனையிட வந்துள்ளார்கள். 

பிரான்ஸ் ராணுவத்தினர் மீது தாக்குதல்: வீரர் ஒருவர் பலி

பிரான்ஸ் ராணுவத்தினர் மீது தாக்குதல்: வீரர் ஒருவர் பலி

அத்துடன், EES திட்டத்தின்கீழ் பயணிகளுடைய கைரேகை, புகைப்படம் பதிவு செய்ய வெகு நேரமாகியுள்ளது.

சுமார் 42 நிமிடம் காத்திருந்த விமானி, பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, பொறுமையிழந்து, விமானத்தில் ஏற தாமதித்த 24 பயணிகளின் உடைமைகளையும் கீழே இறக்கிவைத்துவிட்டு விமானத்தை கிளப்பிவிட்டார். 

24 பயணிகளை ஏற்றாமலே புறப்பட்ட விமானம்: ஒரு எச்சரிக்கை செய்தி? | Plane Takeoff Without 24 Passengers Ees Hold Ups

இந்த மாத இறுதியிலிருந்து EES திட்டத்தை முழு வீச்சில் அமுல்படுத்த உள்ளது பிரான்ஸ்.

EES திட்டம் குறித்த செய்திகள் வெளியாகத் துவங்கும்போதே, ஷெங்கன் பகுதிக்குச் செல்லும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள், EES திட்டம் அமுல்படுத்தப்பட்டால், எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்க நேரலாம் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது.

ஆக, பிரான்சிலிருந்து புறப்பட்ட விமானம் பயணிகளை விட்டு விட்டுச் சென்ற இந்த விடயம், EES திட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும்போது, இதேபோன்ற நிலை பல்வேறு நாட்டினருக்கும் ஏற்படலாம் என எச்சரிக்கும் ஒரு செய்தியாக அமைந்துள்ளது எனலாம். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US