சூரிய குடும்பத்தில் வைரம் கொட்டிக் கிடக்கும் கிரகம் - ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்
சூரிய குடும்பத்தில் உள்ள ஓர் கிரகத்தில் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அடியில் வைரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வைரம் கொட்டிக் கிடக்கும் கிரகம்
நிலவு, செவ்வாய் போன்றவற்றை ஆய்வு செய்துள்ள விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பத்தில் 7 மற்றும் 8வது கிரகமாக இருக்கும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களில் வைர மழை பொழிவதை உறுதி செய்துள்ளனர்.
அதைவிடவும், பூமிக்கு மிக அருகில் உள்ள ஓர் கிரகத்தில் பல மில்லியன் டன் கணக்கில் வைரம் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
புதனின் மேற்பரப்பிற்கு அடியில் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அடியில் வைரங்களின் அடர்த்தியான அடுக்கு இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதன் கிரகம் தான் சூரிய குடும்பத்தில் முதலாவதாக இருக்கும் கிரகமாகும். இது கருப்பு கிரகம் என்று அழைக்கப்படுகிறது.
புதனின் காந்தப்புலம் பூமியை விட மிகவும் பலவீனமானதாகும். இது கருப்பாக காட்சியளிப்பதற்கு, கிராஃபைட் தான் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பெல்ஜியம் மற்றும் சீன விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், புதனின் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இது சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், அதில் உள்ள மூலகங்கள் அனைத்து உருகிய நிலையில் தான் இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.
புதன் கிரகத்தின் மேல்தட்டு சுமார் 80 கி.மீ. ஆழமாக இருக்கலாம் என்றும், அதீத வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தின் காரணமாக மேல் தட்டுக்கு கீழே புதைந்திருக்கும் கார்பன், வைரக் கட்டியாக மாறி இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதில் உள்ள வைர படிவத்தின் தடிமன் 15 கி.மீ எனவும் அதை வெட்டி எடுப்பதற்கான சாத்தியம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. காரணம், புதனின் மேற்பரப்பில் இருந்து பல மைல் ஆழத்தில் இது இருப்பதால், மனிதர்களால் இதை பயன்படுத்த முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |