பிரான்சில் வார இறுதியில் பயணம் மேற்கொள்ள திட்டமா? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி
நீங்கள் பிரான்சில் வாழ்பவராக இருந்து, இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் பட்சத்தில், உங்களுக்கு ஒரு ஏமாற்றமளிக்கும் செய்தி காத்திருக்கிறது.
ஆம், பிரான்சில் ரயில்வே சேவை வழங்கும் SNCF நிறுவனம், பல அதிவேக ரயில்கள் இந்த வார இறுதியில் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
அதற்குக் காரணம் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதுதான்.
குறிப்பாக, பிரித்தனி, Pays de la Loire, Centre Val de Loire, Nouvelle Aquitaine, மற்றும் Occitanie ஆகிய இடங்களிலிருந்து புறப்படும், மற்றும் அந்த இடங்களுக்குச் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட உள்ளன.
பிரான்சில் சனிக்கிழமை முதல் Toussaint விடுமுறைகள் துவங்க உள்ள நிலையில், பள்ளிகளுக்கு இரண்டு வார விடுமுறை அளிக்கப்பட உள்ளது. ஆகவே, பலர் பயணம் புறப்பட திட்டமிட்டிருப்பார்கள். இந்நிலையில், இந்த ரயில்வே வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, பயணம் புறப்படுவோர், தாங்கள் செல்லுமிடங்களுக்கான ரயில் சேவை குறித்து விசாரித்து அறிந்துகொண்டபின் பயணம் புறப்படுவது நல்லது.