பிரித்தானியாவின் எஃகு தொழில்துறையை பாதுகாக்க புதிய திட்டம்., பில்லியன்களில் நிதி ஒதுக்கீடு
பிரித்தானிய எஃகு தொழில்துறையின் (Steel Industries) எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் Plan for Steel எனும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில், உற்பத்திச் செலவைக் குறைக்கவும், உள்கட்டமைப்பு திட்டங்களில் உள்நாட்டு எஃகு பயன்பாட்டை ஊக்குவிக்கவும் முற்படும் நடவடிக்கைகள் அடங்கும்.
மேலும் இத்திட்டத்தின் மூலம், வெளிநாடுகளில் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளிலிருந்து பிரித்தானிய எஃகு பாதுகாக்கப்படும் என நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிமுறைகளின் தாக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மார்ச் 12 முதல் 25% இறக்குமதி வரி விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனால், பிரித்தானிய எஃகு தொழிலுக்கு ஆண்டுக்கு £400 மில்லியன் வர்த்தக இழப்பு ஏற்படும் என கணிக்கப்படுகிறது.
பிரித்தானியா உலகளவில் மிகப்பெரிய எஃகு ஏற்றுமதி நாடாக இல்லையெனினும், இந்தத் தடைகள் பிரித்தானிய எஃகு தொழில் மீது அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
பிரித்தானியாவின் "Plan for Steel" திட்டத்தின் அம்சங்கள்
உள்ளூர் எஃகு பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டங்கள் கொண்டுவரப்படும் (Heathrow விமான நிலைய விரிவாக்கத்திற்காக 400,000 டன் எஃகு தேவைப்படும்).
மின்சார ஆர்க் உலைகளில் (Electric Arc Furnace) முதலீடு செய்யப்படும் - இது இயற்கை எரிபொருள் சார்ந்த Blast Furnace-ஐ விட குறைந்த உலோகக் கழிவுகளை உமிழும்.
நியாயமற்ற வணிகப் போக்குகளை தடுப்பது, குறைந்த விலையில் எஃகு இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மின்சாரச் செலவுகளைக் கண்காணித்து, நாட்டின் எஃகு தொழிலை உலகளவில் போட்டியிடும் நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
பிரித்தானிய எஃகு தொழிலின் நிலைமை மற்றும் எதிர்கால பாதுகாப்பு
Tata Steel நிறுவனம் போர்ட் டால்போட் (Port Talbot), வேல்ஸில் உள்ள blast furnace-ஐ electric arc furnace-ஆக மாற்றும் திட்டத்தினால் 2,800 வேலைகள் குறைந்துள்ளன.
British Steel, Scunthorpe மற்றும் Rotherham பகுதிகளில் மின்சார உலோக உலைகளை அமைக்கும் திட்டத்தில் 3,000 வேலைவாய்ப்புகளை குறைக்கிறது.
பிரித்தானிய அரசு £2.5 பில்லியன் உதவி நிதியை வழங்க முன்வந்துள்ளது, இது National Wealth Fund மூலம் தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறை பிரமுகர்களின் கருத்து
"காலதாமதமானாலும், இது மிக அவசியமான உதவி" என GMB தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
"இதனால், சரிவடைந்த எஃகு துறையை மீட்டெடுக்க முடியும்" UK Steel இயக்குனர் ஜெனரல், கேரத் ஸ்டேஸ் கூறியுள்ளார்.
இந்த திட்டம், பிரித்தானிய எஃகு தொழிலின் எதிர்காலத்தை உறுதியாக பாதுகாக்கும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Steels, Plans to protect UK steel industry, Plan for Steel