இந்த செடி இருந்தால் போதும்... வீட்டில் இனி பண மழை தான்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சரியான வாஸ்து குறிப்புகள் மற்றும் விதிகளை பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் உள்ள பல பிரச்சினைகளை தீர்க்கலாம்.
பொதுவாகவே அனைவரது வீட்டிலும் பண கஷ்டம் என்பது அதிகமாகவே இருக்கும்.
ஏன் இப்படி பண கஷ்டம் வருகிறது என்பது பற்றி யோசிக்க முடியாத அளவிற்கு மாறி மாறி பிரச்சினைகள் வந்துக்கொண்டே இருக்கும்.
நிதித் தடைகளை நீக்க சில சிறப்பு வகையான மலர்கள் மற்றும் செடிகள் இருக்கின்றது.
அந்தவகையில் வீட்டில் பணம் வருவதை அதிகரிக்கும் பூவை பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பணத்தை அள்ளித்தரும் பூ
செம்பருத்தி மலரானது வீட்டை அலங்கரிப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. வாஸ்த்து சாஸ்திரத்தின் படி செம்பரித்தி பூவானது மங்களகரமாகவும் கருதப்படுகிறது.
இந்த மலரானது லட்சுமி தேவிக்கு மிகவும் விருப்பமான மலராகும். இது சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலை போக்கும்.
உங்களது வீட்டில் பண குறைவால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றால் கட்டாயம் வீட்டில் செம்பருத்தி பூ செடியை நட்டு வையுங்கள்.
செம்பருத்தி பூவில் பல நிறங்கள் இருக்கிறது. ஆனால் நீங்கள் சிவப்பு நிற பூவை தான் நட்டு வைக்க வேண்டும். இது தான் நிதி பிரச்சனைகளை நீக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
வெள்ளிக்கிமைகளில் மகா லட்சுமி கோவிலுக்குச் சென்று சிவப்பு செம்பருத்திப் பூவை அர்ச்சனை செய்யுங்கள்.
வெள்ளிக்கிழமையில் கோயிலுக்கு செல்வதை 11 நாட்களும் தொடர்ந்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வெள்ளியும் 11 நாட்கள் சென்றால் வீட்டில் பண வருகை அதிகரிக்கும்.
செம்பருத்திப் பூவை தண்ணீருடன் சூரியனுக்கு வைத்து பூஜை செய்வதன் மூலம் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.
இதை வீட்டில் நட்டு வைப்பதன் மூலம் தந்தையுடனான உறவு சீராக இருக்கும்.
சூரிய தோஷம் இருந்தால் வீட்டின் கிழக்கு திசையில் செம்பருத்தி செடியை நடவும்.
செம்பருத்தி செடி மாங்கல்யம் தோஷத்தை நீக்கவும் பயன்படுகிறது.
திருமணம் போன்றவற்றில் தாமதம் ஏற்பட்டால் வீட்டில் செம்பருத்தி பூவை வைத்து வழிபடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |