ராகு,கேது, சனியின் கோபத்திற்கு ஆளாகி விட்டீர்களா? இந்த மரத்தை வழிபட்டால் போதும்!
ராகு,கேது, சனி போன்ற முக்கிய கிரகத்தின் கோபத்திற்கு ஆளாகினால் நீங்கள் குறிப்பிட்ட மரத்தை வழிபடலாம்.
பொதுவாகவே ராகு,கேது, சனி பகவான் போன்ற கிரகங்கள் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார்.
இவர்களுடைய கோபத்திற்கு ஆளாகினால் அரசானாக இருந்தாலும் ஆண்டியாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே இவ்வாறான பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
எந்த மரத்தை வழிபட வேண்டும்?
ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் காணப்படுகிறது. மரத்தை நடுவது ஒவ்வொரு மனிதருடைய அடுத்த சந்ததிகளுக்கு நன்மை பயக்கும்.
பல மரங்கள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் பயனளிக்கும் நிலையில், குறிப்பிட்ட ஒரு மரம் பல நன்மைத் தருகிறது.
இந்த மரத்தை உங்கள் வீட்டில் வைப்பதன் மூலம் கிரக தோஷம் இன்றி பல பிரச்சினைகளும் நீங்கும்.
அதற்கு நீங்கள் நட வேண்டியது அனைத்து மருத்துவ குணங்களும் நிறைந்த வேப்ப மரத்தை தான்.
இந்த மரத்தின் இலைகள் முதல் பட்டை வரை அனைத்து மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
குச்சியை பயன்படுத்துவதால் பூச்சிகள் நீங்கும், மரப்பட்டையின் சாறு குடிப்பதால் ரத்தம் சுத்திகரிக்கப்படும், இலையின் சாறை குடிப்பதால் வயிற்றில் இருக்கும் பூச்சித் தொந்தரவு நீங்கும்.
மருத்துவ குணங்கள் மாத்திரமின்றி மத நம்பிக்கையும் அதிகமாக காணப்படுகிறது. வேப்பம்பூவை பயன்படுத்துவதால் சனி மற்றும் செவ்வாய் தோஷங்கள் நீங்கும்.
இந்த மரத்தை பயன்படுத்தி யாகம் செய்வது, சனியின் கோபத்தை குறைக்கும். கேதுவின் தாக்கம் இருந்தால், தண்ணீரில் வேப்ப இலைகளைப் போட்டு குளிக்கலாம்.
வேப்ப மரத்தால் செய்யப்பட்ட ஜெபமாலை அணிவதால் தொழுநோய் குணமாகும்.
வேப்ப இலைகளை வீட்டைச் சுற்றி மாட்டி வைத்தால் எந்த எதிர்மறை சக்தியும் வீட்டிக்குள் வராது என்பது ஐதீகம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |