ஜெனீவா ஏரியில் எக்கச்சக்கமான பிளாஸ்டிக் துகள்கள்
More plastic pollution found in Lake Geneva: ஜெனீவா ஏரியில் முன்பு கணிக்கப்பட்டதைவிட, கூடுதல் பிளாஸ்டிக் மாசு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுவிஸ் பல்கலை மற்றும் ஆய்வமைப்பு ஒன்று இணைந்து மேற்கொண்ட ஆய்வில், ஜெனீவா ஏரி, முன்பு கணிக்கப்பட்டதைவிட, 656 மடங்கு வரை அதிக அளவு நுண்பிளாஸ்டிக்கால் மாசுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
லோசான் பல்கலைக்கழகமும், Swiss Federal Technology Institute of Lausanne என்னும் ஆய்வமைப்பும் இணைந்து ஒரு குழுவாக இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன.
ஜெனீவா ஏரியில் எக்கச்சக்கமான பிளாஸ்டிக் துகள்கள்
மனித முடியின் அகலத்திற்குச் சமமான, அதாவது, 100 மைக்ரோமீட்டருக்கும் குறைவான, சாதாரணமாக பயன்படுத்தப்படும் வலைகளுக்குப் புலப்படாத, மிக நுண்ணிய துகள்களைக் கண்டறியும் ஒரு முறையை இந்தக் குழு உருவாக்கியுள்ளது.

ஏரியின் மொத்த பிளாஸ்டிக் மாசுபாட்டில் 97 சதவீதம் வரை இந்த நுண் பிளாஸ்டிக் துகள்களே காரணம் என்பது அந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
இவ்வளவு சிறிய துகள்கள், மனித உடலிலுள்ள செல்களுக்குள் நுழைந்து அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும் என ஆய்வை தலைமையேற்று நடத்திய கிறிஸ்டல் ஹாஸ்லர் என்பவர் எச்சரிக்கிறார்.
சுவிஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 99 சதவிகித நுண்பிளாஸ்டிக்குகளை வடிகட்டுகின்றன, ஆனால் அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு, டயர் தேய்மானம், செயற்கைத் துணிகளைத் துவைத்தல் மற்றும் மழைநீர் வழிந்தோடுதல் போன்ற பரவலான மூலங்களிலிருந்து வருகின்றன.
விடயம் என்னவென்றால், அவை சுத்திகரிப்பு நிலையத்தை ஒருபோதும் சென்றடைவதில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |