ஜெர்சியை அணிந்து கொண்டிருந்ததால் பவுண்டரியில் பந்தை கோட்டை விட்ட வீரர்! சிரித்த ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ
டி10 கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் தனது பனியனை மாற்றும் முன்பே பந்து அவரை நோக்கி வந்ததால், அதனை அவர் தவறவிட்டு பவுண்டரியான வீடியோ வைரலாகியுள்ளது.
இந்தத் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டீம் அபுதாபி மற்றும் நார்தன் வாரியர்ஸ் அணிகள் மோதின.
இதில், அபுதாபி அணியில் விளையாடிய ரோஹன் முஸ்தபா எனும் வீரர், பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது வியர்வையால் ஜெர்சி ஈரமாகிவிட்டதால் வேறு ஜெர்சியை மாற்ற தயாரானார்.
அப்போது பேட்ஸ்மேன் ஒரு ஷாட் அடிக்க அது நேராக பவுண்டரிக்கு விரைந்து வந்துக்கொண்டிருந்தது.
இதை சற்றும் எதிர்பார்க்காத முஸ்தபா, ஜெர்சியை முழுவதும் அணிந்தும் அணியாமலும் ஓடினார்.
ஆனால் அவர் ஜெர்சியை அணிந்துவிட்டு பார்க்கும்போது பந்து பவுண்டரியை கடந்தது.
இதனைக் கண்ட பார்வையாளர்கள், வர்ணனையாளர்கள், வீரர்கள் என அனைவரும் வாய்விட்டு சிரித்துவிட்டனர்.
Classic village cricket fielding today in the #AbuDhabiT10 @ThatsSoVillage pic.twitter.com/XhQ91dd2cX
— Callum (@CalBatchBlue) February 1, 2021