கோடிகளில் ஏலம் எடுக்கப்படும் IPL 2024 -ல் விளையாட முடியாத வீரர்கள்! யார் அவர்கள்?
ஐபிஎல் 2024 ஏலத்தில் கோடிகளுக்கு வாங்கப்பட்ட வீரர்களில் காயம் மற்றும் தனிப்பட்ட காரணத்திற்காக எந்த வீரர்கள் விலகினார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஐபிஎல் 2024ன் முதல் போட்டி வருகின்ற மார்ச் 22ம் திகதி முதல் தொடங்குகிறது. இதனால் உலகெங்கும் உள்ள வீரர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
ஆனால், சில பிரபலமான வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், காயம் காரணமாகவும் தொடங்குவதற்கு முன்பே வெளியேறியுள்ளனர். அவர்கள், கோடிகளில் வாங்கப்பட்ட வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
கஸ் அட்கின்சன் (Gus Atkinson)
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இவர், தனது பிஸியான நேரத்தினாலும், உடலுக்கு ஓய்வு வேண்டும் என்பதற்காகவும் தனது பெயரை ஐபிஎல் 2024 -லிருந்து திரும்ப பெற்றுள்ளார். இந்நிலையில், இவருக்கு பதிலாக இலங்கை பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீரா (Dushmantha Chameera) இடம் பெறவுள்ளார்.
ஹாரி புரூக் (Harry Brook)
இங்கிலாந்தின் தொடக்க பேட்ஸ்மேனான ஹாரி புரூக்கை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்து.
இவரது பாட்டி கடந்த பிப்ரவரி மாதம் இறந்ததால் தனது பெயரை ஐபிஎல்லில் இருந்து திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.
தில்ஷன் மதுஷங்க (Dilshan Madushanka)
இலங்கையை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான தில்ஷன் மதுஷங்கவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ 4.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இவருக்கு வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தொடை தசையில் காயம் ஏற்பட்டதால் ஐபிஎல்லில் பங்கேற்க மாட்டார் என்று மும்பை இந்தியன்ஸ் அறிக்கை வெளியிட்டது.
ராபின் மின்ஸ் (Robin Minz)
ஜார்கண்டின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ராபின் மின்ஸை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.3.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இவர், சில வாரங்களுக்கு முன்பு பைக்கில் சென்ற போது விபத்துக்குள்ளானதால் ஐபிஎல் தொடரில் களமிறங்க மாட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |