கூகுள் playstoreல் நீங்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியில் உள்ள ஆபத்து! எச்சரிக்கை செய்தி
கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிக அளவில் மால்வேர் பாதிப்புக்கு உள்ளான ஆபத்தான செயலிகள் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.
சமீபத்தில் வெளியான ஆய்வின் மூலமே இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிரிப்டோகரன்சி வேலட்டுகள், மேனேஜ்மெண்ட் செயலிகள், இன்வெஸ்ட்மெண்ட் க்ளோன் செயலிகள், போட்டோ எடிட்டர்கள் ஆகிய செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அதில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பாதிக்கப்பட்ட செயலிகளை கூகுள் கண்டுபிடித்து நீக்கினாலும் சில செயலிகள் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்த செயலிகள் பயனர்களுக்கு தெரியாமல் கட்டண சந்தாவிற்கும், முறைகேடான இணையதளங்களை இயக்கவும் அனுமதி வழங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறத. இந்த செயலிகள் அப்டேட் ஆவதை போல வைரஸ்களை போனில் நிறுவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே தொழில்நுட்பத்தை கவனமக கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது.