சிஎஸ்கே பயணித்த விமானம்: புறப்படும் முன் தோனியிடம் விமானி வைத்த கோரிக்கை! வைரலான வீடியோ
சிஎஸ்கே அணி பயணிக்கு விமானத்தின் விமானி ஒரு தோனி ரசிகராக இருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடப்பதில் ஆச்சரியம் இருக்காது.
தோனியை கொண்டாடும் ரசிகர்கள்
ஒரு வருடத்திற்கு பிறகு எம்.எஸ்.தோனி கிரிக்கெட்டுக்கு திரும்பியது உலகம் முழுவதும் உள்ள பல ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2020-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் மட்டுமே அவர் விளையாடுவதை ரசிகர்கள் காணக்கூடிய ஒரே போட்டி வடிவமாக இருக்கிறது. எனவே, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல்லில் சிஎஸ்கே கேப்டனாக அவரது தோற்றம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஐபிஎல் 2023 தான் அவருக்கு கடைசி சீசன் என்று வதந்திகள் பரவியுள்ளன. முந்தைய நேர்காணல்களில் தோனி இன்னும் 2-3 ஐபிஎல் சீசன்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட முடியும் என்று அவரது முன்னாள் அணியினர் கூறியிருந்தாலும், கடந்த இரண்டு போட்டிகளில் அவரது கேமியோ தோற்றத்தைப் பார்த்த பிறகு ரசிகர்களும் அவ்வாரே நம்புகின்றனர்.
BCCI/IPL Photo
தோனி மிகக் குறுகிய நேரமே ஆட்டத்தில் இருந்தார், ஆனால் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) ஆகியவற்றுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் 200 மற்றும் 400 என்ற மிகப்பெரிய ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருந்தார்.
தோனியிடம் விமானி வைத்த கோரிக்கை!
இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பைக்கு பயணம் செய்தனர். விமானம் புறப்படுவதற்கு முன் விமானி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது, ஒரு நிமிடம் அவர் எம்எஸ் தோனியின் ரசிகராக மாறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். புறப்படுவதற்கான அறிவிப்பின்போது, "நான் ஒரு பெரிய ரசிகன் சார், தயவு செய்து சிஎஸ்கே கேப்டனாக தொடர்ந்து விளையாடுங்கள்" என்று கூறினார்.
Pilot : "Please continue to be a captain of CSK. I'm a huge fan of you sir." ❤️@MSDhoni #MSDhoni #WhistlePodu pic.twitter.com/fXiNwuNgI0
— DHONI Era™ 🤩 (@TheDhoniEra) April 6, 2023
இந்த வீடியோவை தோனியின் ரசிகர் பக்கமான 'DHONI Era' வெளியிட்டது, மேலும் அந்த வீடியோ ட்விட்டரில் வெளிவந்ததால் அது சிறிது நேரத்தில் வைரலானது. இந்த பைலட்டைப் போன்ற பலர் தங்களுக்கு மிகவும் பிடித்த 'தல' தொனியை மஞ்சள் ஜெர்சியில் பல ஆண்டுகளாகப் பார்க்க விரும்புகிறார்கள்.
CSK இந்த சீசனின் மூன்றாவது மற்றும் முதல் போட்டியை மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு எதிராக இன்று (சனிக்கிழமை) வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு விளையாடுகிறது.