இப்படி போங்க...! பெற்றோர்கள்-மாணவர்களுக்கு பிரித்தானியா அரசாங்கம் முக்கிய அறிவுறுத்தல்
பிரித்தானியா முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் நாட்டின் போக்குவரத்து செயலாளர் Grant Shapps முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடு தளர்வு திட்டத்தின் முதற்கட்டத்தின் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவம் பள்ளிகள் மீண்டும் திறக்கபடவுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் பள்ளிகளுக்கு சைக்கிள் அல்லது நடந்து செல்லுமாறு போக்குவரத்து செயலாளர் Grant Shapps அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, நாளை நாடு முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கவுள்ள நிலையில், நாம் பொது போக்குவரத்து மீதான நெருக்கடியை குறைக்க வேண்டும்.
எனவே, முடிந்தால் பள்ளிகளுக்கு சைக்கிள் அல்லது நடந்து செல்லுமாறு அனைத்து பெற்றோர் மற்றும் மாணவர்களையும் வலியுறுத்துகிறேன்.
With schools fully reopening tomorrow we all need to do our bit to ease pressure on public transport, so I'd urge any parents + pupils to ? or ?♀️ to school if they can! As a healthy / fun way to commute it helps make sure those needing to use public transport can do safely.
— Rt Hon Grant Shapps MP (@grantshapps) March 7, 2021
சைக்கிள் அல்லது நடப்பது பயணிப்பதற்கான ஆரோக்கியமான, வேடிக்கையான வழியாகும், அதுமட்மின்றி பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டியவர்கள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதிப்படுத்த இது உதவுகிறது என கூறியுள்ளார்.