மன்னர் சார்லஸ் பெயரால் உறுதிமொழி? தேவையில்லை என முடிவு செய்துள்ள கனேடிய நகரம்
அரசு ஊழியர்கள் பதவியேற்கும்போது, மன்னர் சார்லஸ் பெயரால் உறுதிமொழி எடுக்கும் நடைமுறையை ரத்து செய்ய ஒன்ராறியோவிலுள்ள பிரெஸ்காட் நகர கவுன்சில் திட்டமிட்டுவருகிறது.
மன்னர் சார்லஸ் பெயரால் உறுதிமொழி எடுக்கும் நடைமுறையை ரத்து செய்யும் தீர்மானம்
அரசு ஊழியர்கள் பதவியேற்கும்போது, மன்னர் சார்லஸ் பெயரால் உறுதிமொழி எடுக்கும் நடைமுறையை ரத்து செய்யும் தீர்மானத்தை பிரெஸ்காட் நகர கவுன்சிலர் Lee McConnell முன்மொழிந்துள்ளார்.
அதை இன்னொருவர் வழிமொழியும் பட்சத்தில், அது இம்மாதம், அதாவது பிப்ரவரி 27ஆம் திகதி கவுன்சிலின் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
image - Paul Ellis/The Associated Press
அந்த தீர்மானம் நிறைவேற்றப்படுமானால், அது முனிசிபல் சட்டமாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஏற்கனவே, கியூபெக் நகரம் அரசு ஊழியர்கள் மன்னர் சார்லஸ் பெயரால் உறுதிமொழி எடுக்கும் நடைமுறையை ரத்து செய்யும் தீர்மானத்தை கடந்த டிசம்பரில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
image - Rosalie Sinclair/Radio-Canada