கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக்.., வீட்டிலேயே செய்வது எப்படி?
கிறிஸ்துமஸ் என்றால் சாண்டா கிளாஸ், பிளம் கேக், கிறிஸ்துமஸ் மரம் போன்ற பல விடயங்கள் சிறப்பாக உள்ளது.
அந்தவகையில், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சுவையான பிளம் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆரஞ்சு ஜூஸ்- 1 கப்
- உலர் திராச்சை- 2 ஸ்பூன்
- கருப்பு உலர் திராச்சை- 2 ஸ்பூன்
- பச்சை செர்ரி- 2 ஸ்பூன்
- டுட்டி ஃப்ரூட்டி- 2 ஸ்பூன்
- சிவப்பு செர்ரி- 2 ஸ்பூன்
- பாதாம்- 1 ஸ்பூன்
- முந்திரி- 2 ஸ்பூன்
- சர்க்கரை- 3 கப்
- பால்- ¼ கப்
- எண்ணெய்- ¼ கப்
- வெண்ணிலா எசன்ஸ்- ½ ஸ்பூன்
- மைதா- 1 கப்
- பேக்கிங் பவுடர்- 1 ஸ்பூன்
- பேக்கிங் சோடா- ½ ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- ஜாதிக்காய் பொடி- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து அதனுடன் உலர் திராச்சை, கருப்பு உலர் திராச்சை, பச்சை செர்ரி, டுட்டி ஃப்ரூட்டி மற்றும் சிவப்பு செர்ரி சேர்த்து 2 மணி நேரம் ஊறவிடவும்.
பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கரைத்து கேரமல் பதம் வந்ததும் தண்ணீர் சேர்த்து கலந்து ஆறவைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் பால், எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின்னர் அதில் மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், ஏலக்காய் தூள் மற்றும் ஜாதிக்காய் தூளை சலித்து சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் கரைத்த சர்க்கரை, ஊறவைத்த உலர் பழங்கள் மற்றும் பாதாம் முந்திரி சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக இதனை ஓவன் அல்லது குக்கரில் 40 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான பிளம் கேக் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |