12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.., எந்த மாநிலம் முதலிடம் தெரியுமா?
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் முடிவடைந்து வினாத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெற்றது.
இந்நிலையில், மே 8ஆம் தேதி அதாவது இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இத்தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, 7, 53,142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்- 99.15 சதவீதம், இயற்பியல்- 99.22 சதவீதம், வேதியியல்- 98.99 சதவீதம், உயிரியல்- 99.15 சதவீதம், கணிதம்- 99.16, சதவீதம், தாவரவியல்- 99.35 சதவீதம், விலங்கியல்- 99.51சதவீதம், கணினி அறிவியல்- 99.73 சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
மேலும், வணிகவியல்- 98.36 சதவீதம், கணக்குப்பதிவியல்- 97.36சதவீதம், பொருளியல்- 98.17 சதவீதம், கணினி பயன்பாடுகள்- 99,78 சதவீதம், வணிக கணிதம், புள்ளியல்- 98.78 சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
பாடவாரியாக, தமிழ்- 135, இயற்பியல்- 1,125, வேதியியல்- 3,181, உயிரியல்- 827, கணிதம்- 3,022, தாவரவியல்- 269, விலங்கியல்-36 , கணினி அறிவியல்-9,536, வணிகவியல்- 1,624, கணக்கு பதிவியல்- 1,240 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஆங்கிலப் பாடப்பிரிவில் எந்த மாவை, மாணவிகளும் முழு மதிப்பெண் எடுக்கவில்லை.
தேர்வு முடிவில் அரியலூர் மாவட்ட மாணவ மாணவிகள் 98.80 சதவீதம் தேர்ச்சி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளனர்.
மேலும் அடுத்தடுத்த இடங்களில் ஈரோடு, 98 சதவீதம், திருப்பூர்-97.50 சதவீதம், கோவை- 97.50 சதவீதம், கன்னியாகுமரி-97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |