கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் பிளஸ் 2 மாணவி விபரீத முடிவு: தமிழகத்தில் சோகம்
கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் விபரீத முடிவு எடுத்துள்ளார்.
கணிதத்தில் தோல்வி
தமிழக மாவட்டமான கடலூர், விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் அபிநயா (வயது 17) பேர்பெரியான்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகத்தில் வெளியாகியது. அப்போது தனது தேர்வு முடிவுகளை பார்த்ததும் அபிநயா சோகத்துடன் இருந்தார்.
அவர், தமிழில் 85, ஆங்கிலத்தில் 41, இயற்பியலில் 54, வேதியியலில் 72, கணினி அறிவியலில் -2 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் கணித பாடத்தில் 26 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்திருந்தார்.
விபரீத முடிவு
இதையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மனமுடைந்து போன அபிநயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.
பின்னர், தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அபிநயாவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |