இலங்கை அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு: நியமிக்கப்பட்ட புதிய குழு: பிரதமர் அறிவிப்பு
இலங்கையில் அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சம்பள ஆணைக்குழு
பல துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்வு காண்பதற்காக இந்த ஆண்டு சம்பள ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படும் என்று இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
06ம் திகதியான இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இது தொடர்பான அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

அதில், சம்பள ஆணைக்குழு மூலமாக அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்க எதிர்பார்ப்பதாகவும், அதிபர் சேவை பணிபுரியும் நபர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்து அதிபர் சங்கங்கள் மற்றும் அதிபர்களுடன் கலந்து பேசி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முரண்பாடுகளை தொடர்ந்து ஆராய்ந்து கலந்து ஆலோசித்து தீர்வு காண முயற்சித்து வருகிறோம். இந்த அரசாங்கத்தின் கொள்கையின்படி, இந்த ஆண்டு சம்பள ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கல்வித் துறை மட்டுமின்றி பல துறைகளிலும் சம்பள உயர்வு வழங்கப்படாதது குறித்து நெருக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த புதிய சம்பள ஆணைக்குழு மூலம் இதற்கான தீர்வை காண முயற்சிப்பதாகவும், அதில் அதிபர்களின் பிரச்சனை குறித்தும் பரிந்துரைகளை முன்வைக்க நாம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |