ஈரான் போரால் எரிபொருள் நெருக்கடி..பரிந்துரைகளை நிராகரித்த அவுஸ்திரேலிய பிரதமர்
அவுஸ்திரேலியாவில் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான பரிந்துரையை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிராகரித்துள்ளார்.
எரிபொருள் விநியோக நெருக்கடி
மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போரால் எரிபொருள் விநியோகம் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இது உலகளாவிய விநியோக அழுத்தங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக, எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளை நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று, சர்வதேச எரிசக்தி முகமை (IEA) வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் அல்லது பயணங்களைக் குறைக்க வேண்டும் என்ற பரிந்துரை எழுந்தது.
ஆனால், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) இந்த பரிந்துரைகளை நிராகரித்துள்ளார்.
அவை உலகத்திற்கான பரிந்துரைகள்
இதுகுறித்து மெல்போர்னில் பேசிய அவர், குறைவாக வாகனம் ஓட்டுதல், நெடுஞ்சாலை வேக வரம்புகளை மணிக்கு 10 கிலோ மீற்றர் குறைத்தல் மற்றும் விமானப் பயணத்தைக் குறைத்தல் உள்ளிட்ட IEA-வின் பரிந்துரைகள், அவுஸ்திரேலியாவை நோக்கமாகக் கொண்டவை என்ற கருத்தை நிராகரித்தார்.
மேலும் அவர், "நிச்சயமாக அவை எங்களுக்கான பரிந்துரைகள் அல்ல. அவை உலகத்திற்கான பரிந்துரைகள்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |