பிரித்தானியா பிரதமர் போரிஸ் இதற்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டம்! வரும் 12-ஆம் திகதி முதல் இது மீண்டும் திறக்கப்படலாம்
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஊரடங்கு தளர்த்துவதற்கான தரவுகள் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
வரும் திங்கட்கிழமை முதல் பிரித்தானியாவில் கட்டுப்பாடுகளில் புதிய விதிமுறைகள் சில நடைமுறைக்கு வரவுள்ளது.
அதற்காக போரிஸ் ஜோன்சன் Road Map என்ற முறையை கொண்டு வந்துள்ளார். ஆனால் அதே சமயம் ஊரடங்கு தளர்த்துவதற்கு எந்த ஒரு தரவும் இல்லை என்று போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
கன்சேர்வேடிவ் கட்சி உறுப்பினர்களுடன் போரிஸ் பேசிய போது, கொரோனா வைரஸ் தொற்று விகிதங்கள் அதிகரிக்கும் வாய்ப்பைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பதாகவும், குறிப்பாக மூன்றாவது அலை ஐரோப்பா முழுவதும் பிடிபட்டதாகத் தெரிவதாகவும் கூறினார்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், கொரோனா பரவல் மீண்டும் பரவக் கூடும். ஆனால் முன்பு கொரோனா பரவல் இருந்த போது, நம்மிடம் அப்போது தடுப்பூசி இல்லை, இப்போது நம்மிடம் தடுப்பூசி இருக்கிறது. இந்த, வெற்றிகரமான தடுப்பூசி மூலம் பரவலின் அதிகரிப்பு போதுமான அளவு குறைக்கப்பட வேண்டும்.
முந்தைய அனுபவ படி, ஐரோப்பாவில் கொரோனா பரவல் பரவினால் மூன்று வாரங்களுக்குப் பிறகு பிரித்தானியாவை தாக்கும் என்று கூறப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை அது நடக்க வாய்ப்பில்லை, தடுப்பூசி ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதே சமயம் இந்த முறை எனக்கு எழும் கேள்வி என்னவென்றால், இந்த முறையும், கடந்த காலங்களில் இருந்ததைப் போலவே மோசமானதாக இருக்குமா? அல்லது தடுப்பூசி காரணமாக ஏற்படும் பாதிப்பை நாம் போதுமான அளவு தணித்திருக்கிறோமா என்பது தான்.
இந்த தடுப்பூசியால் பாதிக்கப்படக்கூடிய ஏராளமான மக்கள் இப்போது மரணம் மற்றும் கடுமையான நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஏராளமான நம்பிக்கைக்குரிய சான்றுகள் உள்ளன.
விஷயங்கள் திட்டமிட வேண்டும், அடுத்த கட்ட Road Map வரும் 12-ஆம் திகதி துவங்கும். அதில், கடைகள் மற்றும் சிகையலங்கார நிபுணர்கள் மீண்டும் திறக்க முடியும்.குடும்பத்தினர் உள்ளிட்ட 15 விருந்தினர்களுடன் திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
பப்கள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு வெளியே சேவை செய்ய முடியும். ஆனால் தற்போது இதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்று போரிஸ் கூறியுள்ளார்.