'பறிபோன உயிர்களுக்கு பொறுப்பேற்கிறேன்' மன்னிப்பு கேட்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன்
கோவிட் -19 காரணமாக கடந்த ஆண்டு பிரித்தானியாவில் இழந்த உயிர்களுக்காக பிதாமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரதமர் தனது கடமைகளில் தோற்றுவிட்டதாகவும், ஆபத்தான விளைவுகள் ஏற்படும் அளவிற்கு செயற்பாட்டில் தாமதம் கட்டியதாலும் பிரித்தானியாவில் கடந்த ஆண்டு லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனதாக தொழிற்கட்சி எம்.பி ரிச்சர்ட் பர்கன் குற்றம் சாட்டினார்.
இழந்த உயிர்களுக்கு பிரதமர் மன்னிப்பு கேட்கவேண்டிய நேரம் இது அல்லவா? என பர்கன் வினவியதை அடுத்து, போரிஸ் ஜான்சன் தற்போது "deeply, deeply sorry" என மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும், அரசாங்கம் செய்த எல்லாவற்றிற்கும் தான் "முழுப் பொறுப்பையும்" ஏற்றுக்கொள்வதாகக் ஜான்சன் கூறினார்.
ஒவ்வொரு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் இழப்பிற்கும் இரங்கல் தெரிவிப்பதாகவும், அவர்களது குடும்பங்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களிடம் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
ஐரோப்பாவிலேயே பிரித்தானியா தான் மிக உயர்ந்த கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ளது, கிட்டத்தட்ட 125,900-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிதத்திலிருந்து இன்று வரையிலான நிலவரம் குறித்து அறிய, ஒரு பொது விசாரணை (Public Enquiry) நடத்தப்படவேண்டும் என உலகெங்கிலும் உள்ள சமூகங்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்புகள், பிரித்தானியா குடிமக்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.