இளவரசர் பிலிப் மரணம்! பிரதமர் போரிஸ் ஜோன்சன் வேதனையுடன் வெளியிட்ட அறிக்கை
இளவரசர் பிலிபின் அசாதாரணமான வாழ்க்கை மற்றும் அவர் ஆற்றிய கடமைகள் போன்றவைகளை குறிப்பிட்டு, பிரதமர் போரிஸ் ஜோன்சன் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் Duke of Edinburgh-ன் இளவரசரான பிலிப் இன்று தன்னுடைய 99 வயதில் மரணமடைந்தார்.
கடந்த சில நாட்களாகவே இதய பிரச்சினை தொடர்பாக லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிலிப், சமீபத்தில் வீடு திரும்பிய நிலையில் இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில், பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
On the death of HRH The Prince Philip, Duke of Edinburgh. pic.twitter.com/rZlbY1matF
— Boris Johnson (@BorisJohnson) April 9, 2021
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிலிப் ஒரு நேசிக்கப்பட்ட மற்றும் மரியாதைக்குரிய பொதுநபராக மட்டுமில்லை. அவர் ஒரு அர்பணிப்பானவர், கணவர், பெருமைமிக்க தந்தை, தாத்தா என ஒரு நல்ல மனிதராக இருந்து வந்தார்.
அவர் நாகரீகமாக இருப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பேசுற்றுச்சூழல் ஆர்வலராகவும், இயற்கை உலகின் சாம்பியனாகவும் இருந்தார். தன்னுடைய Duke of Edinburgh விருதுத் திட்டத்தின் மூலம், எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையை வடிவமைத்து ஊக்கப்படுத்தினார், மேலும் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அவர்களின் நம்பிக்கையை வளர்த்ததுடன், அவர்களின் லட்சியங்களையும் ஊக்குவித்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக அவருக்கு மகாராணி உறுதுணையாக இருந்தார். மனைவியாக மட்டுமின்றி, அவருடைய ஆட்சியின் ஒவ்வொரு நாளும், அவர் பக்கத்தில் இருந்து வந்தார். 70 ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
தனது கணவருக்கும் எப்போதும் அவர் கடமைப்பட்டிருந்தார். எனவே நாங்கள் இன்று அவரது மகாரணியுடன் துக்கம் அனுஷ்டிக்கிறோம், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், Duke of Edinburgh இளவரசர் பிலிப் அவர்களின் அசாதாரண வாழ்க்கை மற்றும் பணிக்கு ஒரு தேசமாகவும், ராஜ்யமாகவும் நன்றி கூறுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இளவரசர் மரணம் காரணமாக பிரதமர் அலுவலகத்தில் பறக்கப்பட்ட கொடி, அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.