மிரட்டலுக்கு பயப்படாத போரிஸ் ஜான்சன்! உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டவர திட்டம்; உலக நாடுகளுக்கு அழைப்பு
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனில் நடக்கும் பயங்கரமான போரை முடிவுக்கு கொண்டு வர ஆறு அம்ச திட்டத்தை வகுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து இன்று 11-வது நாளாக தாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்ய படைகள் தலைநகர் கீவை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் விமான போக்குவத்து தடை, பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதனிடையே, ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் ஏறக்குறைய போர் பிரகடனம் என்று பிரித்தானியாவுக்கு புடின் நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் நடக்கும் பயங்கரமான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆறு அம்ச திட்டத்தை உலக தலைவர்களிடம் முன்வக்கவுள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பை முறியடிக்க தனது திட்டத்தின் கீழ் உலகம் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
போரிஸ் ஜான்சனின் ஆறு அம்ச செயல் திட்டம்:
1- உலகத் தலைவர்கள் உக்ரைனுக்காக ஒரு "சர்வதேச மனிதாபிமான கூட்டணியை" அணிதிரட்ட வேண்டும்
2- அவர்கள் கீவின் இராணுவ தற்காப்புக்கான முயற்சிகளில் ஊக்கம் அளித்து ஆதரிக்கவேண்டும்
3- ரஷ்யா மீதான பொருளாதார அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்
4- போருக்கான இராஜதந்திர தீர்மானங்கள் தொடரப்பட வேண்டும், ஆனால் உக்ரைனின் சட்டபூர்வமான அரசாங்கத்தின் முழுப் பங்கேற்புடன் மட்டுமே
5- யூரோ-அட்லாண்டிக் பகுதி முழுவதும் (நேட்டோ நாடுகளிடையே) பாதுகாப்பு மற்றும் பின்னடைவை வலுப்படுத்துவதற்கான விரைவான பிரச்சாரம்' மேற்கொள்ளவேண்டும்
6- கூடுதலாக, புடினின் செயல்களின் அதிர்ச்சி மதிப்பு மங்கத் தொடங்கும் என்று அஞ்சுவதால், 'உக்ரைனில் ரஷ்யா என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை ஊர்ந்து செல்லும் இயல்பாக்கத்தை' எதிர்த்துப் போராட விரும்புகிறார்.