பிரித்தானியாவில் ரகசியமாக ஊரடங்கு விதிக்கப்படுகிறதா? உண்மையை உடைத்த பிரதமர்
பிரித்தானியாவில் ரகசியமாக ஊரடங்கு விதிக்கப்படுகிறதா என்பது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
கென்ட், Ramsgate-ல் உள்ள சாகா தடுப்பூசி மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போரிஸ் ஜான்சன், மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.
கிறிஸ்மஸுக்கு முன்னதாக அவர்கள் தங்கள் செயல்பாடுகளைப் பற்றி சந்திக்க வேண்டும். யாருக்கும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடாது.
ஆனால், மிக விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பவதற்கான வழி அனைவரும் தற்போது பூஸ்டர் தடுப்பூசி போடுவது தான்.
மேலும், பிரித்தானியாவில் ரகசியமாக ஊரடங்கு விதிக்கப்படுவதாக பரவும் செய்திகளை போரிஸ் ஜான்சன் மறுத்துள்ளார்.
கடந்த ஆண்டை விட நிலைமை தற்போது மிக வித்தியாசமாக இருக்கிறது. கூடுதல் பாதுகாப்பாக நம்மிடம் தடுப்பூசி மற்றும் பரிசோதனைக்கான திறன் உள்ளது.
ஒரு நிகழ்ச்சிக்கோ அல்லது பார்ட்டிக்கோ போக விரும்பினால், அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது பரிசோதனை மேற்கொள்வதும், ஜாக்கிரதையாக இருப்பதை உறுதிப்படுத்துவதும் ஆகும்.
மக்கள் பார்ட்டிக்கு போகக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை, நாங்கள் பப்புகளை மூடபோவதும் இல்லை. மேலும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான விரைவான வழி பூஸ்டர் தடுப்பூசி போடுவதே ஆகும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.