சிவகங்கை பயங்கர விபத்தில் 12 பேர் மரணம்..இழப்பீடு அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி
தமிழக மாவட்டம் சிவகங்கையில் நடந்த பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.
12 பேர் மரணம்
சிவகங்கையின் கும்பங்குடி பாலம் அருகே நடந்த பயங்கர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். 
எனினும், காயமடைந்தவர்களில் சிலர் அபாய நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி விபத்தில் பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரூ.2 லட்சம் இழப்பீடு
இதுகுறித்த அவரது எக்ஸ்தள பதிவில், "சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.
மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |