சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படங்கள்
10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ஜம்மு & காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற்ற யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியாவில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த யோகா தினத்தில் பங்கெடுத்த மக்களுக்கும், உலகெங்கும் யோகா செய்பவர்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
As we mark the 10th International Day of Yoga, I urge everyone to make it a part of their daily lives. Yoga fosters strength, good health and wellness. Wonderful to join this year's programme in Srinagar. https://t.co/oYonWze6QU
— Narendra Modi (@narendramodi) June 21, 2024
மேலும், உலக தலைவர்கள் தன்னிடம் யோகா பற்றி விவாதிப்பதாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (SKICC) இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கவிருந்த நிகழ்ச்சி, கனமழையால் தடைபட்டது. பின்னர், ஏற்பாடுகள் வீட்டுக்குள் மாற்றப்பட்டன.
தால் ஏரியில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கு யோகா அமர்வுக்குப் பிறகு, காஷ்மீர் மக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
Post Yoga selfies in Srinagar! Unparalled vibrancy here, at the Dal Lake. pic.twitter.com/G9yxoLUkpX
— Narendra Modi (@narendramodi) June 21, 2024
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |