மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் மோடி - நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவு
மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளமைக்கு நன்றி கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவு
கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
குறித்த தேர்தலின் இறுதி முடிவானது தற்போது வெளியிடப்பட்டு வருகிறது.
பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 230-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தளவில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 110க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். அதில் 6,12,970 வாக்குகளையும் பெற்றிருந்தார்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு தந்துள்ளனர். இது இந்திய வரலாற்றில் ஓர் சாதனை.
இந்த பாசத்திற்காக மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். கடந்த 10 ஆண்டுகளின் மக்களுக்காக நாம் செய்த நல்ல பணியை மீண்டும் தொடருவோம் என உறுதியளிக்கிறேன்.
எங்கள் அனைத்து காரியகர்த்தாக்களுக்கும் அவர்களின் கடின உழைப்புக்கும் நான் தலை வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.
People have placed their faith in NDA, for a third consecutive time! This is a historical feat in India’s history.
— Narendra Modi (@narendramodi) June 4, 2024
I bow to the Janata Janardan for this affection and assure them that we will continue the good work done in the last decade to keep fulfilling the aspirations of…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |