பிரதமர் மோடியின் பயோபிக் திரைப்படம்.., மோடியாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் யார் தெரியுமா?
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தின் பட பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு புதிய படம் ஒன்று உருவாகிறது.
இதில் பிரதமர் மோடியின் வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்களை இந்தப் படம் வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்துக்கு "மா வந்தே" என தலைப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தை வீர் ரெட்டி தயாரிக்கிறார். மேலும், தெலுங்கு இயக்குநர் கிராந்தி குமார் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் மோடி கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். இவர் தமிழில் சூரி நடிப்பில் வெளியான "கருடன்" படத்தில் நடித்தவர்.
மோடியின் பயோபிக் படமான ‘மா வந்தே’ இந்திய மொழிகள் மட்டுமல்லாமல், ஆங்கிலத்திலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |