இந்நாளில் தானியங்களை இறைவனுக்கு படைப்பது வழக்கம்..தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய தலைநகர் டெல்லியில் அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் பண்டிகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.
எல்.முருகனும், அவரது மனைவியும் தங்கள் வீட்டு வாசலில் புதிய மண்பானையில் பொங்கல் வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் நடைபெற்றன.
“தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
— Dr.L.Murugan (@Murugan_MoS) January 14, 2024
செல்வரும் சேர்வது நாடு.”
நாட்டு மக்களின் தேவைக்குக் குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே, நல்ல நாடாகும் எனும் பொருள் கொண்ட “#திருக்குறளை” மேற்கோள் காட்டி பேசினார் மாண்புமிகு… pic.twitter.com/Q9BcieGEV1
பிரதமர் மோடி அதனை கண்டு களித்தார். அத்துடன் அவர் தமிழில் பொங்கல் வாழ்த்து கூறினார்.
நரேந்திர மோடி பேசும்போது, 'புதிய தானியங்களை பொங்கல் திருநாளில் இறைவனுக்கு படைப்பது வழக்கம். சிறுதானிய உற்பத்தியில் 3 கோடி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
வண்ணமிகு ரங்கோலி கோலத்தை போன்றது நமது நாட்டின் கலாச்சாரம். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் இணைந்து செயல்படும்போது நாடு வளம் பெறும். 2047யில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம்' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |