பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து எந்த அறிவிப்பும் வராது! கசிந்த முக்கிய தகவல்
கிறிஸ்துமஸுக்குப் பிறகு அமுலுக்கு வரும் கட்டுப்பாடுகள் குறித்து இந்த வாரம் பிரதமரிடமிருந்து எந்த அறிவிப்பும் வராது என மூத்த அரசாங்க வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் மாறுபாட்டின் தீவிரம் குறித்த புதிய தரவுகளை பிரித்தானியா சுகாதார பாதுகாப்பு நிறுவனம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edinburgh பல்கலைக்கிழகம் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகளில், ஒமிக்ரான் மாறுபாடு டெல்டாவை விட வீரியம் குறைந்தது என தெரியவந்துள்ளது.
மேலும், ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என நம்பப்படுகிறது.
இதனிடையே, இங்கிலாந்தில் கிறிஸ்துமஸுக்குப் முன் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பில்லை என பிரதமர் அறிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள், அடுத்த வாரம் வரவிருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து கிறிஸ்மஸுக்கு முன்னரே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கிறிஸ்துமஸுக்குப் பிந்தைய கட்டுப்பாடுகள் குறித்து இந்த வாரம் பிரதமர் போரிஸ் ஜான்சனிடமிருந்து எந்த அறிவிப்பும் வராது என மூத்த அரசாங்க வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் கட்டுப்பாடுகளை எதிர்க்கும் மூத்த கன்சர்வேடிவ் எம்.பி.க்கள், கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு எதிராக இரண்டு சமீபத்திய ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளைபயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.