லண்டன் சுரங்க ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரதமர் ரிஷி சுனக்!
லண்டன் பாப்பி தினம் நேற்று (நவம்பர் 3) அனுசரிக்கப்பட்டது.
தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்ட பிரித்தானிய புதிய பிரதமர் ரிஷி சுனக் பாப்பி மலர்களை விற்பனை செய்தார்.
லண்டன் பாப்பி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் முதல் வியாழக்கிழமையில் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு நவம்பர் முதல் வியாழனான நேற்று (நவம்பர் 3) அனுசரிக்கப்பட்டது.
Remembrance Day அல்லது Poppy Day என்பது காமன்வெல்த் உறுப்பு நாடுகளில் முதல் உலகப் போரின் முடிவில் இருந்து, கடமையின் போது இறந்த இராணுவ வீரர்களை கௌரவிப்பதற்காக அனுசரிக்கப்படும் நினைவு நாள் ஆகும்.
TWITTER/SARA LE ROUX
இந்நிலையில், நேற்று பிரித்தானியாவின் பிரதம மந்திரி ரிஷி சுனக், ராயல் பிரிட்டிஷ் லெஜியனின் (RBL) வருடாந்திர பாப்பி அப்பீலுக்கு நிதி சேகரிக்க இராணுவ உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர் ஸ்டீபன் லு ரூக்ஸுடன் இணைந்தார்.
வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு Westminster சுரக்க ரயில் நிலையத்திற்கு சென்று பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ரிஷி சுனக், தான் வைத்திருந்த காகித பாப்பி மலர்களை விற்பனை செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Bought my Poppy from Rishi and asked for a receipt @MahyarTousi pic.twitter.com/bQP8857Y0K
— Hard Cheese! (@SonOfTheWinds) November 3, 2022
ஒவ்வொருவரிடமும் பாப்பி மலர்களை விற்பதன்மூலம் கிடைக்கும் நீதியானது ராயல் பிரிட்டிஷ் லெஜியன் (RBL) தொண்டு நிறுவனத்திற்கு செல்லும்.
ராயல் பிரிட்டிஷ் லெஜியன் ஒரு பிரித்தானிய தொண்டு நிறுவனமாகும், இது பிரிட்டிஷ் ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் வீரர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சார்ந்திருப்பவர்கள் மற்றும் தேவைப்படும் அனைவருக்கும் நிதி, சமூக மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குகிறது.