இரட்டை பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக 2 அமைச்சர்கள் மீது பிரதமர் நடவடிக்கை!
அவுஸ்திரேலியாவில் இரட்டை பாலியல் குற்றச்சசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள 2 உயர் அமைச்சர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சராக இருந்த Linda Reynolds மற்றும் அட்டர்னி ஜெனரலாக இருந்த Christian Porter ஆகியோர் திங்கட்கிழமை முதல் தங்கள் உயர் பதவிகளிலிருந்து பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அமைச்சரவையின் வேறு சில பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாராளுமன்ற வளாகத்திற்குள்ளேயே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் பொதுமக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.
இதனால், தொடர்ந்து அழுத்தம் அதிகரித்த நிலையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் உயர் சட்ட அதிகாரி மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞரான Porter, 1988-ல் 16 வயது சக ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
கடந்த ஜூன் மாதம் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை Porter மறுத்துள்ளார்.
அதேபோல், நாடாளுமன்ற அலுவலகத்தில் ஒரு இளம் பெண் ஊழியர் ஒரு உயர் அதிகாரி மீது வைத்த குற்றச்சாட்டை தவறாக கையாண்டதற்காகவும், பாதிக்கப்பட்ட பெண்ணை "lying cow" என கூறியதாகவும் Linda Reynolds மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்குள்ளேயே பெண்களை கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதற்கு, பொதுமக்களின் கோபத்தைத் தணிக்க இந்த நடவடிக்கை போதுமானதாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.