ஆண்டுக்கு ரூ.436 செலுத்தி ரூ.2 லட்சம் காப்பீடு.., இந்த திட்டம் பற்றி தெரியுமா?
ஆண்டு பிரீமியமாக ரூ.436 செலுத்த கூடிய இந்திய அரசின் திட்டத்தை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY)
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டம் என்பது மக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் இந்திய அரசின் திட்டமாகும். இந்த திட்டத்தில் பிரீமியம் குறைவாக இருப்பதால் மிக குறைவாக சம்பளம் வாங்குபவர்கள் கூட இந்த திட்டத்தை தொடங்கலாம்.
இது ஒரு Term Insurance திட்டமாகும். நீங்கள் இல்லாத நேரத்தில் உங்களது குடும்பத்தினர் நிதி உதவியை பெறுவதற்கு இந்த திட்டம் உதவும். அதாவது இந்த திட்டத்தில் கீழ் காப்பீடு செய்த நபர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி கிடைக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு பிரீமியமாக ரூ.436 செலுத்த வேண்டும். அதன்படி, காப்பீட்டு பிரீமியமாக டெபாசிட் செய்யப்படும் தொகைக்கும் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம். இந்த திட்டத்தை வாங்குவதற்கு உங்களது வயது 18 முதல் 50 வரை இருக்க வேண்டும்.
PMJJBY இன்சூரன்ஸ் திட்டத்தின் கவரேஜ் காலம் ஜூன் 1 முதல் மே 31 வரை ஆகும். அதாவது ஜூன் 1 ம் திகதி மட்டுமே திட்டத்தை புதுப்பிக்க முடியும். இந்த பிரீமியம் தொகை மே 25 முதல் மே 31 வரை கணக்கில் இருந்து ரூ.436 தானாகவே கழிக்கப்பட்டு பாலிசி புதுப்பிக்கப்படும்.
இதற்கு விண்ணப்பதாரர் தனது ஒப்புதலை அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் காப்பீடு செய்த வங்கியில் நாமினி க்ளைம் செய்து இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு, டிஸ்சார்ஜ் ரசீதுடன், பிற ஆவணங்களை கொடுக்க வேண்டும். விபத்து நடந்த 30 நாட்களுக்குள் க்ளைம் தாக்கல் செய்ய வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |