Post office திட்டம்: ரூ. 2 லட்சம் முதலீடு.., வட்டி மட்டுமே ரூ. 90,000 கிடைக்கும்
போஸ்ட் ஆபிஸ் பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது.
பாதுகாப்பான முதலீடு மற்றும் உறுதியான வருமானம் கிடைப்பதால் மக்கள் அதிகமாக இதனை தேர்வு செய்கிறார்கள்.
அந்தவகையில், FD போல பிரபலமான திட்டங்களில் ஒன்று போஸ்ட் ஆபிஸ் நேர வைப்புத் தொகை (POTD) திட்டமாகும்.
இதில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால், சுமார் ரூ.90,000 வரை வட்டி வருமானம் பெற முடியும்.

போஸ்ட் ஆபிஸ் நேர வைப்புத் தொகை திட்டம் பாதுகாப்பான முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது.
இதில் முதலீட்டாளர்களுக்கு 7.5% வரை வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இந்த அரசு திட்டத்தில் வரிச் சலுகையும் கிடைக்கும் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை இதில் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தில் 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டுகள் என பல காலகட்டங்களில் முதலீடு செய்யும் வசதி உள்ளது.
1 ஆண்டுக்கு முதலீடு செய்தால் 6.9% வட்டி கிடைக்கும். 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 7% வட்டி வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 7.5% வட்டி கிடைக்கும்.
உதாரணமாக, ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் முதலீடு செய்தால், 7.5% வட்டி விகிதத்தில் மொத்தமாக ரூ.2,89,990 கிடைக்கும்.
அதில் வட்டி மட்டும் ரூ.89,990 ஆக இருக்கும். முதலீட்டு தொகையை அதிகரித்தால் வட்டி வருமானமும் அதிகரிக்கும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்து கணக்கை தொடங்கலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.
இந்த நேர வைப்புத் திட்டம் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C கீழ் வரிச் சலுகையும் வழங்குகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |