பலரும் எதிர்பார்த்த Poco-வின் அடுத்த ஸ்மார்ட் போன் ரெடி! விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?
சமீபத்தில் இளைஞர்கள் பலரையும் கவர்ந்த Poco நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட் போன் Poco X3 GT அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Poco X3 GT ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இது இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. முதன் முதலில் Poco X3 GT ஜூன் மாதம் மலேசிய சான்றிதழ் தளமான SIRIM தளத்தில் காணப்பட்டது.
இப்போது, இந்த நிறுவனம் இறுதியாக, அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த Poco X3 GT மலேசியா மற்றும் வியட்நாமில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Poco X3 GT-யின் விலை
8 GB RAM மற்றும் 128 GB சேமிப்பு திறன் கொண்ட Poco X3 GT மலேசியா மதிப்பிற்கு MYR 1,299 ஆகவும், இதுவே 8 GB RAM மற்றும் 256 GB சேமிப்பு திறன் கொண்ட Poco X3 GT-யின் விலை MYR 1,599 விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஆகஸ்ட் 3 முதல் ப்ளாஷ் விற்பனையாக வரும் இது, Cloud White, Black மற்றும் அWave Blue colour வண்ண வகைகளில் கிடைக்கும்.
அதே போன்று வியட்நாமில் ஆகஸ்ட் 5-ல் Poco X3 GT ஸ்மார்ட் போன் பிளாஸ் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Poco X3 GT display
இது 6.6 இன்ச் முழு HD டிஸ்பிளேவுடன் வருகிறது. 1080x2400 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120 hrz திரை புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வருகிறது.
Poco X3 GT processor
MediaTek’s Dimensity-யுடன் வரும் இந்த ஸ்மார்ட் போன் 1100 சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது 5 ஜி, வைபை 6, ப்ளூடூத் v 5.2 மற்றும் ஜிபிஎஸ் இணைப்பைக் கொண்டுள்ளது.
Poco X3 GT camera
மூன்று பின்புற கமெரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் 64MP பிரைமரி கமெராகவும், மற்றொன்று 8 MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 2 MP மேக்ரோ சென்சார் கொண்டுள்ளது. முன்பக்க கமெரா, 16 MP கொண்டுள்ளது.
Poco X3 GT battery
இதில் பேட்டரி அமைப்பு 5,000mAh மற்றும் 67W அதிகவேக சார்ஜ் வசதியுடன் வருகிறது.