சார்ஜரில் இணைத்த 5-வது நிமிடம் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறிய போக்கோ ஸ்மார்ட்போன்!
2021 ஆண்டு மார்ச் மாத வாக்கில் விற்பனைக்கு போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்தபோது வெடித்து சிதறியதாக வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுவதாவது,
ஜூன் 15 ஆம் தேதி வாங்கிய புதிய போக்கோ எக்ஸ்3 ப்ரோ செப்டம்பர் 4 ஆம் தேதி சார்ஜரில் இணைத்த 5-வது நிமிடம் ஸ்மார்ட்போன் வெடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இத்துடன் வெடித்த நிலையில் உள்ள ஸ்மார்ட்போன் மற்றும் அதனை வாங்கிய கட்டண ரசீது உள்ளிட்டவைகளையும் அவர் இணையத்தில் வெளியிட்டார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக போக்கோ தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
I just bought the phone 2 month ago and look at this phone got blast firstly charging 100% than i remove charger than 5 min later blast .shame on uh poco. SIR HELP @POCOGlobal @IndiaPOCO @MiIndiaSupport @MiIndiaFC pic.twitter.com/2VEUL7eYhS
— Ammybhardwaj (@Ammybhardwaj13) September 4, 2021