ஒரு கப் அவல் இருந்தால் போதும்.., சுவையான அவல் லட்டு செய்யலாம்
கிருஷ்ண ஜெயந்தியின் போது தயாரிப்படும் பிரபலமான இனிப்பு பலகாரம் அவல் லட்டு.
கிருஷ்ணர் விரும்பி உண்ணும் அவல் லட்டு கிருஷ்ண ஜெயந்தியின் போது படைத்தால் கிருஷ்ணர் மகிழ்ச்சியடைவார்.
அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த சுவையான அவல் லட்டு எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெள்ளை அவல்- 250g
- வெல்லம்- 400g
- நெய்- தேவையான அளவு
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- தேங்காய்- ½ மூடி
- முந்திரி- 50g
- உலர்திராட்சை- 50g
செய்முறை
முதலில் கடாயில் நெய் ஊற்றி வெள்ளை அவல் போட்டு மொறுமொறுப்பாக வறுபட்டவுடன் அடுப்பை அணைக்கவும்.
அதே கடாயில் நெய் ஊற்றி மிதமான தீயில் பொன்னிறமாக தேங்காய் துருவலை வறுக்கவும்.
பின் நெய் ஊற்றி சூடான பிறகு முந்திரி மற்றும் உலர்திராட்சை போட்டு பொன்னிறத்திற்கு வறுக்கவும்.
அடுத்ததாக பவுடர் வெல்லம் மற்றும் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைக்கவும்.
பின் வறுத்த அவுலை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் நன்கு பொடியாக அரைக்கவும்.
அரைத்த வெல்லம், தேங்காய் துருவல் கலவை, ஏலக்காய் தூள், பொடியாக அரைத்த அவுல், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து நன்கு கலந்து லட்டு பிடித்தால் சுவையான அவல் லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |