கத்தார் உலகக்கோப்பையில் சவுதியை புரட்டியெடுத்த போலந்து!
ஃபிபா உலகக்கோப்பையில் போலந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் சவுதியை அரேபியாவை வீழ்த்தியது.
முதல் பாதியில் முன்னிலை
கத்தாரின் Education City மைதானத்தில் நடந்த போட்டியில் போலந்து மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின.
சாம்பியன் அணியான அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபிய அணி நம்பிக்கையுடன் களமிறங்கியது. மறுமுனையில் முதல் போட்டியை டிரா செய்த போலந்து அணி வெற்றி பெறும் முனைப்புடன் களம் கண்டது.
@Sorin Furcoi/Al Jazeera
ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் போலந்து அணி முதல் கோல் அடித்தது. அந்த அணியின் பையோர் ஜிலின்ஸ்கி இந்த கோலை அடித்தார்.
சவுதி அரேபிய அணி பதில் கோல் அடிக்காததால், முதல் பாதியில் போலந்து அணி முன்னிலை வகித்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் சவுதி அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கோல் அடிக்க முடியவில்லை.
@FIFAWorldCup
கேப்டன் அடித்த கோல்
ஆனால், 82வது நிமிடத்தில் போலந்து கேப்டன் ராபர்ட் லெவான்டோவ்ஸ்கி அபாரமாக கோல் அடித்தார். இதன்மூலம் ஆட்டநேர முடிவில் போலந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் சவுதி அரேபியா 16 ஷாட்களையும், போலந்து 9 ஷாட்களையும் அடித்தன.
@AFP
@FIFAWorldCup