போர் இன்னும் முடியவில்லை..ரஷ்யாவுக்கு எதிராக குரல்! சாம்பியன் பட்டத்தை வென்ற போலந்து வீராங்கனை
போலாந்தின் டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் போலந்தைச் சேர்ந்த உலகின் முதன்மை வீராங்கனையான இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப்பை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அத்துடன் தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றிகளை குவித்த பெருமையையும் பெற்றுள்ளார்.
போட்டி முடிந்த பின்னர் பேசிய ஸ்வியாடெக், தனது வெற்றியை ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், 'நான் உக்ரைன் பற்றி பேச விரும்புகிறேன். உறுதியாக இருங்கள், போர் இன்னும் முடியவில்லை' என உக்ரைன் மக்களுக்கு அவர் தெரிவித்தார்.
Photo Credit: Reuters
Photo Credit: AP Photo/Thibault Camus