கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப் பிடிக்க போட்டியிடும் நபர்
Green Party leader Zack Polanski launches bid to replace Keir Starmer in parliament: கிரீன் கட்சித் தலைவரான ஸாக் போலன்ஸ்கி, கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சிகளைத் துவக்கியுள்ளார்.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தது அனைவரும் அறிந்ததே.

அதுமட்டுமின்றி, அவர் சமீபத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப் பிடிக்க...
கெய்ர் ஸ்டார்மர், இங்கிலாந்திலுள்ள Holborn and St Pancras தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அவர் தனது நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதி காலியாக உள்ளது.
இந்நிலையில், அந்தத் தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் கிரீன் கட்சித் தலைவரான ஸாக் போலன்ஸ்கி.

நான் இந்த பகுதியில் நீண்ட காலமாக வாழ்ந்துவருகிறேன் என்று கூறியுள்ள போலன்ஸ்கி, எனக்கு இப்பகுதியைக் குறித்து நன்றாகத் தெரியும் என்றும், அது எனக்கு பிடித்த இடம் என்றும், நாடாளுமன்றத்தில் இந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த ஆவலாக உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
விடயம் என்னவென்றால், கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, Holborn and St Pancras தொகுதியில் இதுவரை இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |