பிரான்சில் இந்த 20 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்கும் பொலிசார்! பிரதமர் அதிரடி உத்தரவு
பிரான்சில் குறிப்பிட்ட 20 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்கும் படி பொலிசாருக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்சில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, பல கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிக கொரோனா தொற்று உள்ள 20 மாவட்டங்களை பிரதமர் Jean Castex பட்டியலிட்டிருந்தார்.
இந்த மாவட்டங்களில் ஊரடங்கிற்கு பதிலாக தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும், கட்டுப்பாடுகள் மிக இறுக்கமாக இருக்கும் எனவும் பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று சனிக்கிழமை பிரதமர் Jean Castex வெளியிட்ட அறிக்கையில், குறித்த 20 மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினருக்கு இந்த பணியை நியமித்துள்ளதாக தெரிவித்தார்.
தேசிய ஊரங்கை தவிர்ப்பதற்கு என்ன எல்லாம் செய்ய முடியுமோ, அனைத்தையும் செய்யுங்கள்! என தெரிவித்த பிரதமர், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த 20 மாவட்டங்களில் இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன.