நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பிய பொலிஸார்
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் பொலிஸார் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மீண்டும் நோட்டீஸ்
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது.
ஜங்கிள் சஃபாரிக்குள் புகுந்து மானை வேட்டையாடிய சிறுத்தை.., அதிர்ச்சியில் மேலும் 7 மான்கள் உயிரிழப்பு
இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி டிசம்பர் 4 -ம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் வெளியான போது மக்கள் கூட்டம் அலைமோதியது.
அங்கு, அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், 35 வயதுடைய பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார்.
அவரது மகன் ஸ்ரீதேஜ் (9) மூளைச்சாவடைந்திருந்த நிலையில் நினைவு திரும்பியுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஹைதராபாத் ராம்கோபால்பேட்டா காவல் நிலையத்தில் இருந்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீதேஜ்ஜை, அல்லு அர்ஜுன் சந்திக்க வரக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் வந்தால் சாட்சியை மாற்றிவிடக் கூடும் என்றும், மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |