கனடாவில் 8 ஆண்டுகள் கழித்து அம்பலமான பள்ளி விளையாட்டு பயிற்சியாளர்கள் மூவரின் லீலைகள்!
கனடாவில் தங்களிடம் விளையாட்டு பயின்ற மாணவிகளிடம் அத்துமீறிய புகாரில் 3 பயிற்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொண்ட்ரியல் பொலிசார் இது குறித்து கூறுகையில், செயிண்ட் லவுரன் உயர்நிலை பள்ளியில் கூடைப்பந்து விளையாட்டு பயற்சியாளர்கள் மூவரை கைது செய்துள்ளோம். அதில் இருவருக்கு 43 வயதாகிறது, இன்னொருவருக்கு வயது 31 ஆகும்.
மூவரும் சேர்ந்து 2 மாணவிகள் மீது பாலியல் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இந்த சம்பவங்கள் கடந்த 2008ல் இருந்து 2014க்குள் நடந்துள்ளது, தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த பள்ளிக்கூடத்தின் ஊழியர்களுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் உளவியல் ரீதியான சிகிச்சைகளும் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளனர்.