கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? எச்சரிக்கையுடன் பொலிஸ் வெளியிட்ட முக்கிய தகவல்
கனடாவில் தேர்தலில பிரச்சாரத்தின் போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மிரட்டல் விடுத்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கனடாவில் எதிர்வரும் செப்டம்பர் 20ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறன்றனர்.
ஆனால், கட்டாய தடுப்பூசி உட்பட கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து தான் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களிலெல்லாம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவதால் ட்ரூடோ இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி கேம்பிரிட்ஜில் ட்ரூடோ தேர்தல் பரப்புரையின் போது அவருக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிசார் வெளியிட்ட அறிக்கையில், கேம்பிரிட்ஜில் ட்ரூடோவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதான Kitchener குடியிருப்பாளர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கனடாவில் ட்ரூடோ பரப்புரையில் நடந்த சம்பவத்திற்காக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
கைது செய்யப்பட்ட Kitchener குடியிருப்பாளர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எந்தமாதிரியான மிரட்டல் என்பது குறித்து எந்தவிவரமும் வெளியிடாத பொலிஸார், இது பிரதர் மீதான தாக்குதல் அல்லது கொலை மிரட்டல் போன்றது என விவரித்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் அமைதியாக போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு, போராட்டங்களை அமைதியான முறையில் செய்ய மக்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
எங்கேயாவது ஒரு நபர் மீதோ அல்லது அவர்களின் சொத்துக்கள் மீதோ அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால், அச்சுறுத்தல் விடுத்த அடையாளம் காணப்பட்டு அவர் மீது குற்ற வழக்கு போடப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.