வீடு புகுந்து இளைஞரை கைது செய்த சுவிஸ் பொலிசார்: சொன்ன காரணம்
சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் பொலிசார் வீடு புகுந்து 23 வயது இளைஞரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சூரிச் மண்டலத்தின் Zollikon பகுதியிலேயே குறித்த கைது சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது. கைதான 23 வயது இளைஞர் உக்ரேனிய நாட்டவர் எனவும், அவரால் சுவிஸ் சமூகத்திற்கு மிகுந்த அச்சுறுத்தல் என உறுதி செய்யப்பட்டதாலையே அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, விரிவான பரிசோதனைகள் மற்றும் விசாரணைக்கு பின்னரே, அந்த இளைஞரை வீடு புகுந்து கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தரப்பு அத்துமீறி நுழைவதையும், இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்படுவதையும் அப்பகுதி மக்களில் சிலர் நேரில் பார்த்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தற்போது அரசு சட்டத்தரணி அலுவலகம் சார்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.