தமிழ்நாட்டிலும் பரவும் நீட் எதிர்ப்பு போராட்டம் - கல்லூரிக்கு சென்று கைது செய்யும் காவல்துறை

Tamil nadu Tamil Nadu Police NEET
By Karthikraja Jul 22, 2026 02:29 PM GMT
Report

தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்து வருகிறது.

டெல்லி நீட் எதிர்ப்பு போராட்டம்

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை காவல்துறை நடத்தி கலைத்துள்ளது. 

தமிழ்நாட்டிலும் பரவும் நீட் எதிர்ப்பு போராட்டம் - கல்லூரிக்கு சென்று கைது செய்யும் காவல்துறை | Police Arrested Anti Neet Protesters In Tamilnadu

இதனையடுத்து, போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டக்குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு, பீஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட துவங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு போராட்டம்

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவ அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்னர். 

போராட்டம் நடத்திய மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தியது. 

தமிழ்நாட்டிலும் பரவும் நீட் எதிர்ப்பு போராட்டம் - கல்லூரிக்கு சென்று கைது செய்யும் காவல்துறை | Police Arrested Anti Neet Protesters In Tamilnadu

போராட்டம் தீவிரமடைவதை தடுக்க கல்லூரி வளாகங்களுக்கு சென்று காவல்துறையினர் கைது செய்ய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கைது செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "மக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதால் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை, அமைதியான போராட்டத்தை ஆதரிப்போம். 

தமிழ்நாட்டிலும் பரவும் நீட் எதிர்ப்பு போராட்டம் - கல்லூரிக்கு சென்று கைது செய்யும் காவல்துறை | Police Arrested Anti Neet Protesters In Tamilnadu

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டம் முறையாக அனுமதி பெற்று மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை. திடீரென தூண்டுதலால் போராட்டம் நடைபெற்றதால் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

பெ.சண்முகம் கண்டனம்

காவல்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டிலும் பரவும் நீட் எதிர்ப்பு போராட்டம் - கல்லூரிக்கு சென்று கைது செய்யும் காவல்துறை | Police Arrested Anti Neet Protesters In Tamilnadu

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய பாஜக அரசு அமலாக்கி வரும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நீட்தேர்வு வினாத்தாள் கசிவிற்கு காரணமான ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வுகள் கூடாது, நீட் தேர்வில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தலைநகர் டில்லியில் அறவழி போராட்டம் நடந்து வருகிறது.

சோனம் வாங்கக் கைது அதைத் தொடர்ந்து மாணவர்கள் ஊர்வலம் நடத்திட முயற்சித்தனர். அவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக காவல்துறை தடியடி தாக்குதல் தாக்கியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மாணவிகள் மீது மிகவும் கீழ்த்தரமான அணுகுமுறையை காவல்துறையினரும், துணை நிலை ராணுவ வீரர்களும் கையாண்டுள்ளனர். அனைத்தும் வீடியோக்களாக வெளிவந்துள்ளது.

நெஞ்சம் பதைப்பதைக்கும் ஒன்றிய பாஜக அரசின் மிக மோசமான இந்த அடக்குமுறையை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

நேற்று முன்தினம் முதல் சென்னையில் ஓரிடத்தில் அமர்ந்து போராட வழியில்லாமல் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழ்நாடு காவல்துறையால் அலைக்கழிக்கப்படுகின்றனர். மூன்று நாட்களாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை போராடும் ஜனநாயக உரிமைக்கு எதிரானது.

இன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பு செய்து போராடியுள்ளனர். காவல்துறை சென்னையில் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர் மற்றும் கோவை, மதுரை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட பல நகரங்களில், கல்வி வளாகத்திற்குள் புகுந்து கைது செய்துள்ளது இதுவரை நடந்திராத செயல். இது மிக மோசமான அத்துமீறல் ஆகும்.

காவல்துறை கல்லூரி வளாகங்களுக்குள் சென்று மாணவர்களை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. இதுபோன்ற ஜனநாயக விரோத அத்துமீறல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

போராடும் உரிமையை நசுக்குகின்ற தமிழ்நாடு காவல்துறையின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பாக இருக்கிற மாநில முதலமைச்சர் ஜனநாயக உரிமைகள் சார்ந்த போராட்ட நடவடிக்கைகளை ஒடுக்க நினைக்கும் காவல்துறையை கட்டுப்படுத்த வேண்டும்.

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், ஜனநாயக ரீதியில் அறப்போராட்டங்களை நடத்தும் போது, உரிய இடத்தை ஒதுக்கி தர வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தவெக அரசு, நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களின் ஜனநாயக குரல்களை நெறிப்பது பாஜகவின் கல்விக் கொள்கைக்கு துணை போவதாகவே அமைந்துவிடும். 

எனவே, தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோத அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US